முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

🕔 August 10, 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், முகத்தை மூடிக்கொண்டு பரீட்சை எழுதுகின்றவர்களுக்கு பதிலாக, ஆள் மாறாட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், நேற்று முதல் ஆரம்பமான க.பொ.த. உயர்தர பரீட்சையின் போது, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, முகத்தை மறைத்து ஆடை அணந்து கொள்வோர் பரீட்சை நிலையத்துக்கு செல்லும் முன்னர் பரிசோதனைகளுக்காக முகத்தை மூடியுள்ள ஆடையை நீக்கவேண்டும் என்றும்,  பரீட்சை நேரத்தில் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை நீக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்