ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு

🕔 August 3, 2017

மைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர்.

மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொயப்பமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் வருகை தந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணையினை கையளித்தனர்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை கையளிக்கப்பட்டமையினை, நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நெய்ல் இத்தவெல உறுதிப்படுத்தினார்.

பிணை முறி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்க மோசடியாக நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments