ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

🕔 August 3, 2017

– க.கிஷாந்தன் –

ஹெ
ரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

பத்தனை மற்றும் சென்.கிளயார் பிரதேசத்தில்நேற்று மாலை முதல் இரவு வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியன மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விற்பனை செய்பவர்களும், போதைபொருள் பாவிப்பவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் திம்புள்ள பத்தனை மற்றும் ஹட்டன் சமனலகம பகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 640 மில்லிகிராம் ஹெரோயினும், 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments