கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு

🕔 August 1, 2017

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று, ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று திங்கங்கிழமை ஆரம்பமானது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், தமக்கு அரச தொழில்களை வழங்குமாறு கோரி, பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே, ஆளுநர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, கிழக்கு மாகாண முதலமைச்சரும் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்