கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

🕔 July 21, 2017

கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனி கொள்கலனை பரிசோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, இன்று வெள்ளிக்கிழமை  உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர் பதவிகளை வகிக்கும் மூவருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொகெய்ன் விவகாரம் தொடர்பில் நாளை சனிக்கிழமை விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுங்கத் திணைக்கள பேச்சாளரும், அத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் ஆரம்ப நடவடிக்கையாக, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று அதிகாரிகளும் சுங்கத் திணைக்களத்தின் நிருவாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சுங்கத் திணைக்களப் பேச்சாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்; “குறித்த அதிகாரிகள் மூவரும், சர்ச்சைக்குரிய கொள்கலனை ஒழுங்காக பரிசோதித்துள்ளனர். ஆனாலும், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் கவனக்குறைவாக நடந்துள்ளார்க

ளா என்பது குறித்து, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

பொலிஸாரின் தகவல்களின் படி, கைப்பற்றப்பட்ட கொகெய்ன் போதைப் பொருள், 320 கோடி ரூபாய் பெறுமதியானதாகும்.

இச்சம்பவம் தொடர்பில் 07 கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments