முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

🕔 July 21, 2015

Sajin vaas - 032முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர்,  நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலக வாகனங்களை, சட்டத்துக்கு முரணாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைது செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்