தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல்

🕔 July 18, 2017

தேர்தலை பிற்படுத்துவது தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மெலும் கூறுகையில்;

“தேர்தலை பிற்படுத்தும் திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும் பொருட், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்படுத்தப்படுமானால், தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலையே ஏற்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்