மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்

🕔 July 16, 2017

னித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் படி, கலப்படம் செய்யப்பட்ட பெருமளவான பாம் எண்ணெய், இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பாம் எண்ணெய், அக்காலப் பகுதியில் சந்தைக்கு விடப்பட்டுள்ளன.

இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட 24 கன்டெய்னர்க பாம் எண்ணெய் கைப்பற்றப்பட்டதோடு, இறக்குமதி செய்த நிறுவனம் மீது, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த எண்ணெய்யினை சந்தைப்படுத்த விடாமல் தடுப்பதற்கு எதிராக, குறித்த நிறுவனம் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது. ஆயினும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தோல்வியடைந்தது. இதணையடுத்து, கைப்பற்றப்பட்ட பாம் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

சுங்கத் திணைக்களத் தகவல்களின் படி, கலப்படம் செய்யப்பட்ட பாம் எண்ணெய்யினைக் கொண்ட 800க்கும் அதிகமான கன்டெய்னர்கள் கடந்த காலங்களில் இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒவ்வொரு கன்டெய்னரும் 20 ஆயிரம் லீட்டர் எண்ணெய்யினைக் கொண்டதாகும். இந்தக் கணக்கின்படி 01 கோடியே 60 லட்சம் லீட்டர் கலப்படம் செய்யப்பட்ட பாம் எண்ணெய், கடந்த 04 வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஜேர்மன் ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி, மேற்கூறப்பட்ட பாம் எண்ணெய், மனித பாவனைக்கு உகந்ததல்ல எனத் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான எண்ணெய்யினை இறக்குமதி செய்து சந்தைப்படுத்திய நிறுவனங்கள் தொடர்பில் நாளை திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்