வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு

🕔 July 15, 2017

திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை,  அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சென்றிருந்தார்.

இப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை, வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கோரி, அப்பகுதியை இயந்திரங்களை கொண்டு துப்பரவாக்கியதன் பின்னரே இந்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது

இதன்போது சர்ச்சைக்குரிய காணியின் உறுதிப்பத்திரம் (89 ஏக்கர்) வைத்திருப்பவர்களுக்கு காணி உறுதியின் பிரகாரம் காணியை வழங்குவதென்றும், மிகுதி காணியின் ஒரு பகுதியில் வீட்டு திட்டம் ஒன்று அமைக்கவும், மற்றைய பகுதியை இப்பகுதியில் 30 வருடங்களாக குடியிருந்த மக்களுக்கு பகிர்ந்தளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது

இதன்போது, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், காணி உத்தியோகத்தர், பிரதேச பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்