இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து

🕔 July 14, 2017

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் ஒரு ஒப்பந்தமும் 13 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டன.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், விவசாயம், கப்பல்துறை, உயர் கல்வி, தகவல் மற்றும் ஊடகம் ஆகியவற்றினை மேம்படுத்தும் வகையில், மேற்படி ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா ஆகியோர் முன்னிலையில் மேற்படி பத்திரங்கள் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாடுகளினதும் ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டினை வைத்திருப்போருக்கு, வீசா விலக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் அச்சதுஸ்ஸமான் கான், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

டாக்காவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்