இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு

🕔 July 14, 2017

ன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாப் பிரித்து ஆட்சி செய்வதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்துராகரே தர்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது நாட்டில் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தி விடும் என்றும், தேரர் எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, நேற்று வியாழக்கிழமை  உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார்.

“எமது நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினை தொடர்பில் உங்களிடம் பேசுகிறேன். நாட்டை, ஐந்து வலயங்களாகப் பிரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. நாட்டில் ஐந்து வலயங்களை உருவாக்கி, அவற்றினூடாக ஆட்சியை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புகிறது. இன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாகப் பிரிப்பதென்பது மிகவும் பயங்கரமானதாகும்” என்று, இதன்போது தேரர் தெரிவித்தார்.

“நாட்டை இவ்வாறு ஐந்து வலயங்களாகப் பிரிப்பதன் மூலம், முன்பை விடவும் மோசமானதொரு நிலைக்கு நாட்டைத் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர். ஐந்து வலயங்களாக நாடு பிரிக்கப்படுமாயின், மத்திய அரசாங்கத்துடன் மொத்தமாக இந்த நாட்டில் 06 அதிகார மையங்கள் இருக்கும். சமஷ்டி ஆட்சியினைக் கொண்டு வருவதனை இலக்காகக் கொண்டுதான், நாட்டினை இவ்வாறு இன அடிப்படையில வலயங்களாகப் பிரிக்கவுள்ளனர்” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன அடிப்படையில் நாட்டினை அரசாங்கம் பிரிக்குமாயின், அது பாரிய வன்முறைக்கு அடித்தளமிடும் என்றும், நாட்டில் இரத்தக் களறியை ஏற்படுத்தும் என்றும், இந்துராகரே தர்மரத்தன தேரர் எச்சரித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்