போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பிக்குகளிடம் ரணில் கோரிக்கை

🕔 July 12, 2017

பௌத்த சாசனத்திற்கு புதிய அரசியல் யாப்பினூடாக அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறும் போலி பிரசாங்களை நம்பி, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடன், அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

“கடந்த ஆட்சிக்காலத்தில், மல்வத்து பீட மகாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பௌத்த பீடங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டது. இதன்போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு அஞ்சி எல்லோரும் மௌனம் காத்தனர். ஆனால், அவ்வாறான நிலை தற்போது இல்லை” என்று, இதன்போது பிரதரை் கூறினார்.

மேலும், விஹாரைகளின் நிர்வாகத்தில் தலையிட வேண்டிய எந்தத் தேவையும் அரசாங்கத்திற்குக் கிடையாதென்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற ரீதியிலேயே செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பில் பௌத்த சாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்