மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர்

🕔 July 10, 2017

பாரிய ஊழல்,மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை வெட்டி அகற்றுவதற்கு, ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த வாக்குமூலத்தை சமாதான நீதவான் ஒருவர் முன்னிலையில் உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டு, நீர்வழங்கல் திட்டத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, அப்போது அதற்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தனவை ஜனாதிபதி ஆணைக்குழு அழைத்துள்ளது.

தினேஷ் குணவர்தனவுக்கு உதவுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமுகமளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்