அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

🕔 July 5, 2017

புதிய அரசியலமைப்பினை உருவாக்கியது வௌியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல என்று, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தில் கூடிய மகாநாயக்கர்கள் தீர்மானமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் கூறினார்.

62 லட்சம் மக்கள் வழங்கிய ஆணையினையே அரசாங்கம் செயற்படுத்துவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இவற்றினைக் கூறினார்.

புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தில் கூடிய மகாநாயக்கர்கள் தீர்மானமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில், அது குறித்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று,  அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன தற்போதுள்ள அரசியலமைப்பை கொண்டு வந்த வேளை, எதிர்த்தவர்கள், இப்போது, அதனையே செயற்படுத்த வேண்டும் எனக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை எனவும் ராஜித்த இதன்போது கூறினார்.

“அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர், முதலில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.அந்த நடவடிக்கைகள் உரிய முறைப்படி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்