முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

🕔 July 2, 2017
– அஷ்ரப் ஏ சமத் –

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர், தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டதாரிகளின் விபரங்களை ஒன்று திரட்டி, இவர்களுக்கு தொழில் வழங்குமாறு கோரி அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, அமைச்சரவை அங்கீகரித்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, மேற்படி நபர்களுக்கு பொதுநிர்வாக முகாமைத்துவ அமைச்சில் நோ்முகப்பரீட்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவா்கள் அமைச்சர் சுவாமிநாதனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் மேலும் 20 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கும் நியமனம் பெற்றுத் தரும்படியும், தமக்கான நியமனங்களை தாங்கள் வாழும் பிரதேச செயலகங்களுக்குப் பெற்றுத்தரும்படியும், அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“நாங்கள் பல்கலைக்ககழங்களில் கல்வியைத் தொடாராது புலிகள் இயக்கத்தில் 2004, 2006, 2007ஆம் ஆண்டுகளில் இணைந்திருந்தோம். அதன் பின்னா், 2012 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில்  புனா்வாழ்வளிக்கப்பட்டு எமது பட்டப்படிப்பினை முடித்தோம். ஆயினும், கடந்த 02 வருடங்களாக தொழிலின்றி மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் திருமணம் முடித்தவா்கள், அத்துடன் 35 வயதுக்கு மேற்பட்டோா். எங்களின் நிலையறிந்து அமைச்சா் சுவாமிநாதன், எங்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதற்காக, நன்றி தெரிவிக்கின்றோம்” என்று, மேற்படி புன்னாள் புலிகள் சார்பாக நாகேந்திரம் மரியசெபெஸ்டியன் தெரிவித்தாா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்