ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு

🕔 June 30, 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீசானக கோரிக்கை விடுத்துள்ளார்.

“நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரரை, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலகவே சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்க, முன்னின்று பல வேலைகளை செய்துள்ளார் என்று, ஆளும் தரப்பினர்கள் சிலரே கூறி வருகின்றனர்.

ஞானசார தேரர் என்பவர், மஹிந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு, நல்லாட்சியாளர்களால் பாவிக்ப்பட்ட ஒரு கருவி என, நாம் அன்றிலிருந்து கூறி வருகிறோம். இதை அன்று நம்ப மறுத்த முஸ்லிம்கள், இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஞானசார தேரருக்கு மின்னல் வேகத்தில் பிணை வழங்கப்பட்டதுஇதன் பின்னணியில் ஜனாதிபதி இருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில், அவரை மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரையின் படி, அவருடைய இணைப்புச் செயலாளர் ஷிரால், ஞானசார தேரருக்கு பின்னணியில் இருந்து சட்ட சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக, அரசியல் உயர் மட்டங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இது விடயமாக முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் வீசானக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்