பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன்

🕔 June 29, 2017

– கலீபா –

றுகம்பை சுற்றுலாப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக, கரையோரம் பேணல் தினைக்களத்தினால் பொத்துவில் பிரதேச சபைக்கு இன்று வியாழக்கிழமை புதிய டிரக்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளர் திரு. சமீரவிடம் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு டிரக்டர் வண்டியொன்றினைப் பெற்றுத்தர உதவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ. முபாறக்கிடம் புதிய டிரக்டர் இயந்திரத்தை பிரதேச செயலாளர் என்.எம். முஷாரத் வழங்கி வைத்தார்.

டிரக்டரைக் கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் தவிசாளர் வாசித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனணப்பாளர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தவிசாளர் பதவியில் இல்லாத போதும், வாசித் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பிரதேச மக்கள் பாராட்டினைத் தெரிவித்ததோடு, கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்