கோமாரிக்கு வீதி விளக்குகள்; பொத்துவில் பிரதேச சபை பொருத்தியது

🕔 June 23, 2017

– கலீபா –

நீண்டகாலமாக இருளில் மூழ்கிக்கிடந்த கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதிக்கு, பிரதேச சபையினால் இன்று வெள்ளிக்கிழமை மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலையில்  பொத்துவில் பிரதேச சபையினர் இன்று முதற்கட்டமாக கோமாரி பிரதான வீதிக்கு ஒரு தொகுதி விளக்குகளை பொருத்தினர்.

பிரதேச சபை  கலைக்கப்பட்டதன் பின்னர், கோமாரிக் கிராமத்துக்கு பெறுமதியான மின்விளக்குகள் பொருத்தப்படுவது இதுவே முதற்டவையாகும். இக்கிராமத்துக்கு மேலும் மின்விளக்குகளைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எ.ஜி. முபாறக் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்ற ஏ.ஜீ. முபாறக், சபை கலைக்கப்பட்டதன் பின்னர் பொத்துவில் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments