வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம்
🕔 June 23, 2017
– க. கிஷாந்தன் –
‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்படுகின்றன.
இதனால், ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள், பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் சிகிச்சைகள் முழுமையாக செயலிழந்து காண்படுகின்றன.
எனினும், நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.