அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு

🕔 June 22, 2017

ரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு திருப்தியில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனக் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களையும் கருத்தில் கொள்ளும் போது, அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு திருப்தியில்லை என்று, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தேர்தலின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்