தலைப்புச் செய்திகள்

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

resignation - 01மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையானது, இவர்களை இவ்வாறு அதிருப்தி கொள்ளச் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.