முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

🕔 June 19, 2017

மழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது.

ஃபின்ஸ்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய மக்கள் கூட்டத்தை நோக்கி, குறித்த வேன் சென்று மோதியதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 08 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி தாக்குதலை மேற்கொண்ட வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 48 வயதுடைய நபராவார்.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில்; குறித்த வேன் பாதையை விட்டு விலகி, ரமழான் கடமையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியேறியவர்கள் மீது வெறித்தனமாக மோதியது எனத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த எட்டுப் பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபரும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்