வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

🕔 June 14, 2017

ட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து, முதலமைச்சர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்படி அமைச்சர்கள் இருவரையும், பதவிகளை விட்டும் விலகுமாறு, தனது உரையில் அமைச்சர் கேட்டுக் கொண்டமை நினைவுகொள்ளத்தக்கது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிட்டவர்களும், அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்