போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

🕔 June 14, 2017

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொரல்ல பொலிஸாருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
போலி மற்றும் அனுமதியின்றி மாற்றப்பட்ட வாகன இலக்கத் தகடுகளையுடைய வாகனங்களை பயன்படுத்தியதாக, அமைச்சர் மற்றும் அவருடைய செயலாளர் எம்.ஜீ. பாலித்தவ ஆகியோருக்கு எதிராக முறைப்பாட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, பொரல்ல பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

Comments