தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு
🕔 June 13, 2017


– க. கிஷாந்தன் –
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம், இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் காரியாலயங்களில் கடமையாற்றும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலையக பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
நுவரெலியா, கண்டி மற்றும் காலி ஆகிய தபாற்காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு நடத்தப்படுகறது.
நாடு முழுவதிலுமுள்ள பிரதான தபால் காரியாலங்கள், உப தபால் காரியாலங்கள், மலையக தபால் காரியாலயங்கள் உட்பட சுமார் 5000 ஆயிரம் தபால் காரியாலயங்கள் இந்த போராட்டத்தினால் மூடப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தபால் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தபால் ஊழியர்களின் கூட்டு தொழிற் சங்கங்கள் முன்னணி நேற்று நள்ளிரவு முதல், இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

