முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

🕔 June 9, 2017

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் பொதுபலசேனா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இவர்களுடன் தனக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகின்றமையினை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

மேலும், தனது புகழுக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே இவ்வாறு தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார்.

Comments