முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம்

🕔 June 9, 2017

– க. கிஷாந்தன் –

நா
வலபிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை  தீயினால் முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு எரிந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த ராஸிக் என்பவர்க்குச் சொந்தமான ‘டன்சைட்’ எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை. மேலும், சேத விபரங்களும் மதிப்பிடப்படவில்லை.

நேற்று விடுமுறை தினம் என்பதால், தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்