இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

🕔 June 8, 2017

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –

றக்கமாம் பிரதேசத்துக்குட்பட்ட இண்டு கிராமங்களுக்கு  இலவசமாகக் குடிநீர் இணைப்பை வழங்கும் பொருட்டு, சஊதி அரேபிய நிறுவனமொன்று முழுமையான நிதியினை வழங்கியிருந்தபோதும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஒரு தொகைப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய கிராம மக்களுக்கு முழுமையாக, இலவச குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக சஊதி அரேபியாவின் நிதாவுல் ஹைர் எனும் நிறுவனம் நிதியுதவியை வழங்கியது. அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா ஊடாக, மேற்படி நிதியுதவியானது குறித்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாக அறிய முடிகிறது.

மேலும்,  இந்த நிதிக்கும் மு.காங்கிரசுக்குமிடையில்  எவ்வித தொடர்புமில்லை எனவும் தெரியவருகிறது.

இருந்த போதும், மேற்படி குடிநீர் இணைப்பினை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய இணைப்புச் செயலாளர் ரகுமத் மன்சூர்  கலந்து கொண். அந்த வகையில், இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டமை முற்றிலும் தவறாகும் என்கிற விமர்சமும் ஒருபுறம் எழுந்துள்ளது.

மேற்படி இலவச நிதியுதவியினூடாக  சுமார் 80 பேர் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளனர். எவ்வாறாயினும், குடிநீர் இணைப்பினைப் பெற்ற பயனாளிகள் ஒவ்வொருவருவரிடமிருந்தும் தலா 1500 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பணத்தை செலுத்தாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்படி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களாவர். எனவே, அவர்களிடம் கேட்கப்பட்ட பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர்.

இதனையடுத்த சமூக ஆர்வலர்கள், இலவச குடிநீர் இணைப்பின் லட்சணம் இதுதான என்று வினவுகின்றனர்.

இதேவேளை, குடிநீர் இணைப்பை வழங்கும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள்தான் என்று, முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர்தான் தமது பெயரைப் பதிவிட்டுள்ளனர்.

ஏழைகளுக்கு நீரை வழங்குமாறு யாரோ நிதி வழங்குகின்றனர். பயனாளிகளிடம் காசு அறவிடப்பட்டு, குடிநீர் இணைப்பை கையளிக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. பிறகு முஸ்லிம் காங்கிரஸ் எங்கேயிருந்து வந்தது என்று, மக்கள் கேட்கின்றனர்.

எனவே, குடிநீர் இணைப்பினைப் பெற்ற ஏழை பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுதல் வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்