பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்

🕔 June 5, 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர்.

குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மூவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியமையினை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.ஏ. றிஸ்வான் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்குச் சென்றிருந்த மூன்று சிறுமிகளை, அங்கு கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்