80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர்

🕔 June 1, 2017

 – க. கிஷாந்தன் –

கி
னிகத்தேன நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில்  05 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த விபத்து நேர்த்துள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை பகதுலூவ பகுதியை நோக்கி – குறித்த கார் சென்று கொண்டிருந்த போதே விபத்து நடந்ததாகத தெரிவிக்கப்படுகிது.

இதேவேளை, காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் கினிகத்தேன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இருவரும், வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த சிறுவனின் தந்தையும், தாயும், பாட்டியுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். 05 வயதுடைய சனித் தேமிக்க எனும் சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கினிகத்தேன வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்