நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

🕔 May 31, 2017

யிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், இந்தியா உத்திரப் பிரதேஷ் மீரட்டை சேர்ந்த 25 வயதானவராவார்.  அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணை ரயில்வே பொலிஸ் உத்தியோகத்தர் வன்புணர்வு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வழங்கி புகாரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

இதுகுறித்து அங்குள்ள பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்;

“பாதிக்கப் பட்ட பெண் சாதாரண ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நோன்பு வைத்திருந்தமையினால் அவ்வாறு பயணம் மேற்கொண்டமையானது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவர் சொகுசு ரயில் பெற முயற்சித்துள்ளார். இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் சொகுசு ரயிலுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். உடன் ரயில் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை கண்ட மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பிடித்து ரயில்வே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்” என்று  கூறினார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்