ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

🕔 May 30, 2017

றாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், உதவிப் பிரதேச செயலாளராகவுள்ள எம்.ஏ.சி. றமீஷா, பிரதேச செயலாளரின் கடமைகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்