நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம்

🕔 May 30, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் இன்று செவ்வாய்கிழமை காலை தப்பிச் சென்றுள்ளனர் என்று, சிறைச்சாலை பேச்சாளர் ரி.என். உபெல்தெனிய தெரிவித்துள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுபட்டுள்ளனர்.

Comments