காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

🕔 May 30, 2017

வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

இதேவேளை, 103 பேர் காாணமல் போயுள்ளனர் எனவும் அந்த நிலையம் கூறியுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 112 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 142,811 குடும்பங்களைச் சேர்ந்த 05 லட்சத்து 45 ஆயிரத்து 243 பேர், மேற்படி பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டுக்குப் பின்னர், காலநிலை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பு இதுவென அந்த நிலையம் விபரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்