அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

🕔 May 20, 2017

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார்.

இதனையடுத்து, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்திலுள்ள நியாயங்கள் குறித்து, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம், எழுத்து மூலம் ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார் எனத் தெரியவருகிறது.

வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவரை இடம்மாற்றம் செய்வதாயின், ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அக்கரைப்பற்று வலக்கல்வி பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி காசிமுடைய சம்மதத்தின் பேரிலேயே, அவருக்கான இடமாற்றம் வழங்கப்படுவதாக, ஆளுநருக்கு பிழையான தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இதனடிப்படையிலேயே, மௌலவி காசிமுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரை மூதூருக்கு இடம்மாற்றி விட்டு, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய, எம்.கே.எம். மன்சூரை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கொண்டு வரும் முயற்சியில், அக்கரைப்பற்றிலுள்ள அதிகாரம் கொண்ட அரசியல்வாதியொருவர் இறங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மூதூரில் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மன்சூர், நேற்று முன்தினம் வியாழக்கிழமை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆயினும், மௌலவி காசிம் – மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியினைப் பொறுப்பேற்காமல், ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், மௌலவி காசிமுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்