தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

🕔 May 20, 2017

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.

மேற்படி பதவிக்கு கருணாசேன ஹெட்டியாரச்சியை நியமிக்கும் பொருட்டு, ஜேர்மன் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக தற்போது கடமையாற்றும் கருணாதிலக அமுனுகம தனது பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம், பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக பதவி வகித்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்