முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல்

🕔 May 14, 2017

– எப். முபாரக் –

சிறுமியொருவருக்கு முத்தம் கொடுத்து சேட்டை புரிந்த 49 வயது நபரை, இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். திருக்குமரநாதன் உத்தரவிட்டார்.

திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

14 வயதுடைய மேற்படி சிறுமி கடைக்குச்சென்று வீடு திரும்பும் வழியில், சம்பந்தப்பட்ட நபர் சொக்லேட் தருவதாக கூறி சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று சிறுமியை முத்தமிட்டதுடன், சேட்டை புரிந்ததாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, மேற்படி 49 வயது நபர் கைது செய்யப்பட்டதோடு, சட்ட வைத்திய பரிசோதனைக்காக சிறுமி திரூகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்