வீட்டுக்குள் 01 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெண் கைது
🕔 May 2, 2017


– க. கிஷாந்தன் –
வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்ற திங்கட்கிழமை மாலை ஊவாபரணகம பொலிஸார் கைது செய்தனர்.
ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியிலுள்ள வீட்டில் கஞ்சா இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலுக்கிணங்க மேற்படி தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

