கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்
🕔 May 1, 2017



கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த மேற்படி மியன்மார் அகதிகளும், அங்கிருந்து வெளியேறிய நிலையில், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படையினர், காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, இவர்கள் மல்லாகம் பதில் நீதிவானின் உத்தரவிற்கமை நாளைய தினம் வரை, சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகளுக்கு அரச மருத்துவமனை மற்றும் கடற்படை மருத்துவு பிரிபினர், மருத்துவ பரிசோதனைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் சில அமைப்புகளும், தனியார் ஆடை நிறுவனங்களும், இவர்களுக்கான உணவு மற்றும் உடைகளை வழங்கியுள்ளன.


Comments

