மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

🕔 April 25, 2017

– கே.ஏ. ஹமீட் – 

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை வளாகத்தின் பிரதான நுழைவாயில் முன்னால் இன்று காலை ஒன்று கூடிய கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், மறியல் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதிய போசனத்துக்காக மாகாணசபை அமர்வு இடைநிறுத்தப்பட்ட போதிலும்,  அவர்களுக்கான உணவு கிடைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்களுக்கான பகல் உணவினை வெளியிலிருந்து கொண்டு வந்த வாகனத்தினை, சபை வளாகத்தினுள் நுழைய விடாமல் மறியல் போராட்டக்காரர்கள் தடுத்துள்ளமையினால், மதிய உணவின்றி மாகாணசபை உறுப்பினர்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ‘புதிது’ செய்தியாளர் கே.ஏ. ஹமீட் தெரிவிக்கின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்