இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்
🕔 July 11, 2015

– அஸ்ரப் ஏ. சமத் –
எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித் தந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுபவருமான – தனசிரி அமரசிங்க, தனது வீட்டில் இப்தாா் நிகழ்வொன்றை நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பாடு செய்திருந்தாா். இந் நிகழ்வுக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, சிறிது நேரம் அங்கு உரைாயாற்றினார். இதன்போதே – மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி விடயத்தை கடுமையான தொனியில் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, ஆவேசப்பட்ட நிலையிலும் காணப்பட்டார். அவரின் முகம் வழமைக்கு மாறாக சிவந்து காணப்பட்டது.
இந்த நிலையில், அங்கு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ; “நீங்களும் இறைவனைத்தான் நம்புகிறீர்கள், நானும் இறைவனைத் நம்புகின்றேன். இறைவன் உங்களுடைய செயல்களை பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறான்” என்று அங்கிருந்த முஸ்லிம்களைப் பார்த்துக் கூறினார்.
மிகக் குறுகிய நேரம், சில வார்த்தைகள் மட்டுமே பேசிய அவர், இறுதியாக; “இது இப்தாா் நிகழ்வு, இங்கு – நான் அரசியல் பேச விரும்பவில்லை” என்று கூறி, அமர்ந்தார்.
இந் நிகழ்வில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலான, தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் ஹமீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments