சூடு குறையும்; குளிரான செய்தி

🕔 April 19, 2017

லங்கையில் நிலவும் அதிக சூடான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இன்னும் மூன்று வாரங்களில் தற்போதை வெப்பநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது 32 பாகை செல்சியஸ் வெப்பத்தினையும் தாண்டிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரையில்தான் தற்போதைய காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் எனவும், அத்துடன் வெப்பமான காலநிலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சூரியம் உச்சம் கொடுத்தமையினால் மாலை நேரங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமை, வானில் மேகம் குறைவாக காணப்படுதல் மற்றும் காற்று குறைதல் ஆகியவை தற்போதைய அதிக வெப்பமான  காலநிலைக்கு காரணமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments