மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மீதொட்டமுல்ல பகுதிக்கு இன்று புதன்கிழமை சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த உறுதியினை வழங்கினார்.
வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர், இன்று புதன்கிழமை காலை, நாடு திரும்பியிருந்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.