ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது

🕔 April 11, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெற்றிடமான குறித்த அமைப்பாளர் பதவிக்கு, பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இதேபோன்று, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தொகுதி அமைப்பாளர்கள், கட்சி சார்ந்த தமது அர்ப்பணிப்பான நடவடிக்கைகளை எதிர்வரும் மே தினத்தில் வெளிக்காட்ட வேண்டும் என, நான் அறிவுரை வழங்குகின்றேன்” எனவும், அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

Comments