மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு

🕔 April 6, 2017

– க. கிஷாந்தன் –

க்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டது.

நீர் தாங்கியில் சிறுத்தைக் குட்டி இருப்பதை, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டு –  பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினர்.

பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கினர்.

இதனையடுத்து குறித்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மை காலமாக மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் சிறுத்தைக் குட்டியொன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்