வியர்த்துக் கொட்டும் செய்தி; உச்சிக்கு வருகிறது சூரியன்: குழந்தைகள், முதியோர் கவனம்

🕔 April 4, 2017

லங்கையில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலை, மேலும் மோசமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மேல் நேரடியாக – நாளை முதல்  சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பமான காலநிலை நிலவும் போது, முடிந்தளவு அதிகமாக நீர் அருந்துவது ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.

கடந்த டிசம்பர் மாதம் மாரி மழை பொய்த்துப் போன நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்