அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடி இடமாற்றம்

🕔 March 28, 2017
– பாறுக் ஷிஹான் –

ச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே. ஜயசிங்க களுத்துறையிலுள்ள இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்,  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவருடன் இணைந்ததாக  03 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பொலிஸ்  பரிசோதகராக பணியாற்றிய   ஜே.ஏ.எஸ்.என்.கே. ஜயசிங்க,  அச்சுவேலி  பொறுப்பதிகாரியாக பதவியேற்ற பின்னர், அண்மையில்   பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  நான்கு வருடகாலமாகப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு – களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடம்மாற்றம்   வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்