106 தேர்தல் வன்முறைகள் பதிவு

🕔 July 10, 2015

CAFFE - 01பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகிய பின்னர், அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் ‘கபே’ சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட அரச தொழில் நியமனங்கள் தொடர்பில், தமக்கு 67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ‘கபே’ தெரிவிக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்