அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

🕔 March 18, 2017

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், மருத்துவம், பிரதேச செயலகத்தின் சேவைகள், தபால் சேவை மற்றும் காணாமல் போன ஆவணங்களுக்கான முறைப்பாட்டு பதிவுகளை வழங்கும் பொலிஸாரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதன்போது வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு தற்போது அச்சுறுத்தலாகவுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்துவது மற்றும் அதிலிருந்து நிவாரணம் பெற்றுக்கொள்வதுக்கான ஆலோசனைகளும், மருந்து வகைகளும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டன. மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசேதனைகள் இங்கு நடைபெற்றதுடன் அந்நோயாளர்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டன.

மேற்படி நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நிருவாகத்துக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் எம்.ரீ.எம். றியாஸ், அட்டளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் மற்றும் அந்நூர் மகாவித்தியாலய அதிபர் ஏ.எம். மிஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்