சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு

🕔 March 9, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று, நாடாளுமன்ற அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமா செய்யும் பொருட்டு, நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாக, சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து நாடாளுமன்ற அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தபோது, சல்மான் இதுவரை தனது பதவியினை ராஜிநாமா செய்யவில்லை என்றும், அவர் தற்போது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் கூறினார்.

ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியன்றும், மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்ததாக, நாடகமொன்று அரங்கேற்றப்பட்டதோடு, போலி ராஜிநாமா கடிதம் ஒன்றின் பிரதி, மு.கா. முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலியிடம் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்